*அழுகையே தொழுகையாய் ஆகுமா?* 'நினைந்து நினைந்து உணர்ந்து உணர்ந்து நெகிழ்ந்து நெகிழ்ந்து அன்பே நிறைந்து நிறைந்து ஊற்று எழும் கண்ணீர் அதனால் உடம்பு நனைந்து நனைந்து...நம்முரிமை நாயகனை வனைந்து வனைந்து ஏத்துதும் வம்மின் உலகியலீர்' என்று வாழ்வியல் நெறிகளை வகுத்துக் கூறி நெய்யாய் நெக்குருகி நேயம் வளர்த்தவர் வள்ளலார். அல்லல்பட்டு ஆற்றாது அழுது புலம்பி, அவலத்தில் சிக்கிக்கிடக்கும் ஆன்மாக்களுக்காக-அழுகையைப் புதுவிதமான தொழுகையாக்கிய மெழுகுவர்த்தி ...அவர். நம் தமிழ்க்கவிஞர்களும் நாயன்மார்களும் ஞானிகளும் பெரும்பாலும் அருளமுதம் பெற்று ஆனந்திக்க வேண்டி, அடிவாரம் நனைய அழுதவர்கள்தான்! 'யானே பொய்..என் நெஞ்சும் பொய்.ஆனால் வினையேன் அழுதால் உன்னைப் பெறலாமே' என்பார்.. வான்கலந்த மாணிக்கவாசகர். 'காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி' நிற்பார் ஞானசம்பந்தர். 'மார்பாரப் பொழிகண்ணீர்.. மழைவாரும் இணைவிழிகள்!' என்பது அப்பர் பெருமானின் அருள் பிழியும் தோற்றம்! 'நெஞ்சு பொறுக்குதில்லையே..இந்த நிலைகெட்ட மாந்தரை நினைந்துவிட்டால்..' என்று நாட்டுக்காகப் பாட்டில் அ
Posts
Showing posts from December 31, 2017
- Get link
- X
- Other Apps
தைப்பூசச் சொற்பொழிவு வரும் சவரி 2018 தைப்பூச நாள் அன்று வடலூர் மேட்டுக்குப்பத்தில் எரவாஞ்சேரி அன்னம்பாலிப்பு அறக்கட்டளை விழாவில் காலை10 மணிக்குப் பேசுகிறேன். பிற்பகல் மாயவரம் வேத சன்மார்க்க சங்கத்திலும் மாலை திருவண்ணாமலை பாபு சாது சங்கத்திலும் உரையாற்றுகிறேன். முதல்நாள் 30ஆம் தேதி இரவு காரைக்கால் கீழக்காசாக்குடி சங்கத்தில் சொற்பொழிவு செய்கிறேன். அண்மை அன்பர்கள் வருக!