Posts

Showing posts from July 31, 2011

ஐயா ..நான் வேண்டுதல் கேட்டு அருள் புரிதல் வேண்டும்!

ஐயா ..நான் வேண்டுதல் கேட்டு அருள் புரிதல் வேண்டும்! திருவருட் பிரகாச வள்ளலார் என்னும் வெள்ளாடைத் துறவி-- பதினெட்டாம் நூற்றாண்டின் பரப்பளவில் ஆன்மிகத் தடத்தில் அழுத்தமான அடையாளத்தை ஏற்படுத்திய -ஓர் அபூர்வமான மாமனிதர்! ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் என்னும் தெரிவரிய திருமந்திர மொழியை எளியோர்க்கும் தெளிவாக்கிய திருவருட்பா சீலர்! கடவுளை ஒளிவடிவத்தில்கண்ட உயரிய சன்மார்க்கி! மனிதனைப் பிளந்த மத மாச்சரியங்களை சொற்களால் பிளந்த சூத்திரதாரி! கண்மூடி வழக்கங்கள் மண்மூடிப் போவதற்காக காடு மேடுகளைக் கடந்து வடலூரில் வதிந்து வாழ்வியல் போராட்டம் நடத்திய வார்த்தைச் சித்தர்! ஒன்பது வயதிலேயே உறுபொருள் கண்டு உலகச் சார்புகளை உடலாலும் உள்ளத்தாலும் நீத்துக் “கலகம்” செய்யவந்த காருண்ய மூர்த்தி! "கைவீசி நடப்பதும் கூட காற்றில் உலவும் உயிர்களைக் காயப்படுத்திவிடலாம் "என்னும் காரணத்தால்- கைகளைக் கட்டியே நடந்த கருணைத் தென்றல்! "ஜீவகாருண்யமே மோட்ச வீட்டின் திறவுகோல் "என்று சாவியைக் கையிலே வைத்துக் கொண்டு சமுதாயத்தைக் கெஞ்சிய சரித்திர புருஷர் ! சித்துகள் தெரி

யாருமே அணைக்கவில்லை..!

எரிந்து கொண்டிருக்கிறது.. யாருமே அணைக்கவில்லை..! ---ஏழையின் வயிறு! இப்படி ஒரு புதுக் கவிதை எங்கோ படித்த நினைவு! இந்தத் தீ .. இன்று நேற்று ஏற்பட்டதா.. எத்தனையோ யுகமாய் மனித குலத்தோடு மரிக்காமல் தொடர்கிறது..இன்றுவரை! பசிக்காமல் வாழ்கிற பக்குவத்தைப் படைக்காமல் விட்டானே இறைவன் என்று பல நேரம் துடிக்கிறது--நெஞ்சு! எல்லாருக்கும் எல்லாமான வாழ்க்கை இல்லாமல் போய்விட்டதே என்று எரிகிறது--மனம்! எங்கும் இருக்கிறது இல்லாமை! இல்லாமை இல்லாமல் இல்லை ஒரு வாழ்க்கை! இல்லாதவர் படும்பாடு எழுத்தில் வருணிக்கவும் வார்த்தைகள் இல்லாமல்தான் போகிறது! இறைவன் படைப்பில் ஏனிந்தப் பாகுபாடு என்று ஏராளமாய்க் கேள்விகள் எழத்தான் செய்கின்றன --எப்போதும்! நாத்திகம் பேசி நாத்தழும்பேறிய வாய்களுக்கு முன் நற்றமிழ் பேசிட நரம்பில்லாமல் போகிறது! நலிந்து கிடக்கும் நாட்டின் வரலாறு மாற நாம்தான் ஏதாவது செய்ய வேண்டும்! பசிவயிற்றில் பால்வார்க்க தற்காலிகமாகவேனும் ஏதேனும் செய்யத்தான் வேண்டும் ! என் கிராமத்திலேயே என் விழிகள் காணும் பசிப் புலம்பல்-- இன்னும் மாறாமல்தான் இருக்கிறது சமூகம் என்பதைச் சொல்லாமல் சொ

கடவுள் உங்கள் கண்ணுக்குத் தெரிவார்..!

எங்கே கடவுள்..? எங்கும் இருக்கிறார் என்பது நீண்ட காலமாய் கேள்விப் பட்ட செய்திதான்! எங்கும் என்றால்..? தூணிலும்.. துரும்பிலும்..! இதுவும் அறிவோம் நாம்..! எங்கும் என்றால்.. எனக்குள்ளுமிருக்கிறான் இல்லையா என்று நாம் கேட்டுப் பார்த்ததில்லை ! எங்கும் என்றால் அவனுக்குள்ளும் இருக்கிறான் இல்லையா என்றும் நாம் கேட்டுப் பார்த்ததில்லை! எனக்குள் அவனுக்குள் இருந்தால் எல்லாருமே கடவுள் இல்லையா என்றும் நாம் சிந்தித்ததில்லை! இப்படி ஒரு சத்விசாரத்தில் இறங்கிப் பாருங்கள் .. கண்டிப்பாகக்.. கடவுள் உங்கள் கண்ணுக்குத் தெரிவார்!

நீரூற்ற வேண்டுகிறேன்!

146 ஆண்டுகள் கடந்துபோய் விட்டன! சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் நிறுவப்பட்டு 146 ஆண்டுகள் கடந்துபோய் விட்டன! கல்லாய மனத்தையும் ஒரு கணத்தில் கனிவித்துப் பல்லோரும் அதிசயிக்க அருட்பக்குவம் தரும் மகா மந்திரத்தைத் தந்து 146 ஆண்டுகள் கடந்துபோய் விட்டன! அருட்பெருஞ்சோதி என்னும் ஒளிவடிவான ஒலி மந்திரம் அருளப் பெற்று 146 ஆண்டுகள் கடந்துபோய் விட்டன! அன்பு வேண்டும்! அன்பு கனிந்தால் அருள் தோன்றும்! அருள் ஜீவகாருண்யம் ஆகும் ! ஜீவ காருண்யம் பேரின்ப வீட்டின் திறவு கோலாகும்! என்று -- மனிதகுல வாழ்வுக்கு மகத்தான வழி கண்டு சொல்லி 146 ஆண்டுகள் கடந்துபோய் விட்டன! இப்போதுதான் ஏதோ ஒருசிலரின் இரும்பு விழித் திரைகள் திறக்கின்றன! அடைபட்டுக் கிடந்த இரும்புச் செவிகள் கேட்கின்றன! ஆம் --நாம் யோசிக்கத் தொடங்கி இருக்கிறோம்! ஆன்மாவைப் பற்றி ஒருகடவுள் பற்றி ஒளியே கடவுள் பற்றி உயிரே கடவுள் பற்றி ஆன்மநேய ஒருமைப் பாட்டு உரிமையைப் பற்றி ----- நிறைய யோசிக்கத் தொடங்கி இருக்கிறோம்! திருவருட் பிரகாச வள்ளலார் மனிதவள மேம்பாட்டு அறக் கட்டளை என்னும் பெயரில் ஒரு குக் கிராமத்தில் இருந்து மக

தயவு செய்து....!

என்னதான் முயற்சி செய்தாலும் புறத்தில் காண முடியாது - கடவுளை! ஆன்மாவின் அகத்தில் விளங்கும் அகவெளியே அவன் ஆடல் செய்வதற்குரிய அரங்கமாக உள்ளது! அங்கே அவனைத் தரிசிக்கப் பிரியப் படுவோர்கள் அனைவர்க்கும் தேவைப் படுவது-- தயவு! தயவு செய்து உயிர்களிடம் தயவு காட்டுங்கள் மனிதர்களே.. !

உலகப் புரட்சியாளர்

இறைவன் எங்கும் இருக்கிறான் ! எங்கும் என்றால் - எல்லாப் பொருளிலும் இருக்கிறான்! இறைவன் இல்லாத இடம் -- எதுவுமில்லை! தூணிலும் உளன்-துரும்பிலும் உளன் அணுவினைச் சதகூறு இட்ட கோணிலும் உளன்! என்பான் கம்பன்! எங்கும் இருப்பவனை எங்கோ இருப்பவன் என்று எண்ணிவிட்ட அறியாமைதான் இந்தச் சமுதாயத்தின் சாபக் கேடு! கல்லிலும் சிற்பத்திலும் கர்ப்பக் கிரஹத்திலும் இறைவன் இருப்பதாய் நம்பும் மனிதர்கள் எல்லா உயிர்களிலும் இறைவன் இருக்கிறான் என்பதை மறந்து விடுகிறார்கள்! கீழ் மேல் என்று எந்த வேறுபாடும் கிடையாது-அவனுக்கு! உயிர்கள் அனைத்திலும் உறைகிறான் இறைவன் என்பதை உணர்ந்தவன் தனக்குள்ளும் இருக்கிறான் இறைவன் என்பதைத் தானே உணர்வான்! தனக்குள்ளும் இருப்பவன் பிறர்க்குள்ளும் இருப்பான் என்பதையும் பிழையின்றி உணர்வான். அந்தப் பிறர்- மனிதர் மட்டும் அல்லர்! விலங்குகள் -பறவைகள் சிற்றுயிர்கள் என்று எல்லா ஜீவராசிகளும் தான் என்பதையும் அவனே அறிவான்! அறிவானாயின்.. கையெடுத்துத் தொழக் கடவுளைத் தேடி- ஆலயம் செல்ல வேண்டாம் ! அங்கங்கும் தொழலாம் - அங்கங்கும் காணலாம் --! அவனுக்குப் பாலாபிஷேகம் செய்ய-

பசிநீக்கவந்த பரோபகாரி!

திருவருட் பிரகாச வள்ளலார் என்னும் துறவி பதினெட்டாம் நூற்றாண்டின் பரப்பளவில் அழுத்தமான அடையாளத்தை ஏற்படுத்திய - எழுச்சிகரமான மாமனிதர்! ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்னும்   திருமந்திர மொழியைத் தெளிவாக்கிய திருவருட்பா சீலர்! கடவுளை ஒளிவடிவத்தில்கண்ட உயரிய சன்மார்க்கி! மனிதனைப் பிளந்த மத மாச்சரியங்களை சொற்களால் பிளந்த சூத்திரதாரி! கலையுரைத்த கற்பனைகளை நிலையெனக் கொண்டாடும் கண்மூடி வழக்கங்கள் மண்மூடிப் போவதற்காக காடு மேடுகளைக் கடந்து வடலூரில் வதிந்து வாழ்வியல் போராட்டம் நடத்திய வார்த்தைச் சித்தர்! ஒன்பது வயதிலேயே உறுபொருள் கண்டு உலகச் சார்புகளை உடலாலும் உள்ளத்தாலும் நீத்துக் "கலகம்" செய்யவந்த காருண்ய மூர்த்தி! கைவீசி நடப்பதும் கூட காற்றில் உலவும் உயிர்களைக் காயப்படுத்திவிடலாம் என்னும் காரணத்தால் கைகளைக் கட்டியே நடந்த கருணைத் தென்றல்! ஜீவகாருண்யமே மோட்ச வீட்டின் திறவுகோல் என்று சாவியைக் கையிலே வைத்துக் கொண்டு சமுதாயத்தைக் கெஞ்சிய சரித்திர புருஷர் ! சித்துகள் தெரிந்தாலும் மனிதச் சித்தங்களைத் திருத்தவந்த சித்தயோகி! அருளின் வடிவமான ஆன்மநேயி! அவ

என் மார்க்கம் சன்மார்க்கம்

என் மார்க்கம் பிறப்பொழிக்கும் சன்மார்க்கம் என்றார்--வள்ளலார்! இங்குப் -பிறப்புக்குப் பொருள் பிறவாமை என்பதாக எளியேன் கருதவில்லை! பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்றாரே வள்ளுவர்-- அந்தப் பிறப்பை ஒழிப்பதுதான் சன்மார்க்கம் என்கிறார் --வள்ளலார்! பிறப்பினால் கற்பிக்கப் பட்டிருக்கும் பேதங்களை ஒழிப்பதுதான் சன்மார்க்கம் ! அது தான் என்மார்க்கம்- என்கிறார்--பெருமான்! அதுவே நன்மார்க்கம் என்கிறேன் நான்! அதை வலியுறுத்தவே.. ஆகஸ்ட் 28 --ஆம்தேதி அடியேன் ஆரம்பிக்கப் போகும் திருவருட் பிரகாச வள்ளலார் மனிதவள மேம்பாட்டு அறக்கட்டளை என்னும் கலை,இலக்கிய, ஆன்மிக,சமூக,சேவை நிறுவனம்! அதற்கு உங்களால் ஆன உதவிகளைச் செய்யலாமே..! 500 -பேருக்கு மேல் அன்ன தானம் இட்டு ஆரம்பிக்கிறேன் விழாவை! அழைப்பிதழ் விரைவில் அனுப்பி வைக்கிறேன்! அன்புடன் , கவிஞர் கங்கை மணிமாறன் செல்:9443408824

"சிக்"கெனப் பிடிக்க......

நெற்றிக் கண்ணைத் திறப்பதற்கு ஒரு கதவும்,ஒரு பூட்டும் இருக்கிறது! அந்தப் பூட்டை  அருள் என்னும் திறவுகோலைக் கொண்டு திறக்க வேண்டும். அருள் என்பது.. ஆன்ம இயற்கையாகிய பெருந்தயவு என்கிறார்-- வள்ளல் பெருமான்! தயவுதான் நம்மை மனிதராக்கக் கூடியது! பசியே கூட இறைவன் அளித்த ஓர் உபகாரக் கருவி என்கிறார் பெருமான்! பசித்தாரைக் கண்டால் அருள் சுரக்கிறது. அருள் சுரந்தால் ஜீவகாருண்யம் பிறக்கிறது. ஜீவ காருண்யமே  மோட்ச வீட்டின் திறவுகோல் என்கிறார் -வள்ளலார். எந்த நெருடலும் இல்லாமல் நெஞ்சம் திறக்கிறதா இல்லையா..? வள்ளலார் நம்மை வாழ்விக்கவே வந்தவர் - நாம் தான் அவரைச் சிக்கெனப் பிடிக்கத் தெரியாமல் சீரழிந்துவிட்டோம்!