Posts

Showing posts from November 20, 2011

நல்ல பிள்ளையாக..!

ஞான சபைத் தலைவனுக்கு  நல்ல பிள்ளையாக  நாமிருக்க வேண்டாவா..? வேண்டும்தானே! முதலில் .. வடலூர் பெருமானின்  வாழ்வியல் கருத்துகளை  மனத்தில் இருத்தி  வாயுற வாழ்த்துவோம்  வாருங்கள்!      

மனிதனை ஆட்டுவிக்கிறது மனம்..!

மனமெனும் ஓர் மடப்  பயல்-- பன்முகம் சேர்மனம் என்கிற பரியாசப்   பயல்--- விரிந்த மனம் என்னும் சிறிய விளையாட்டுப் பயல்---  பாய்மனம் என்னும் முரட்டுப் பயல்---  மயங்கு புத்தி  என்னும் உலக வழக்காளிப் பயல்--- கலையறியாச் சித்தம் என்னும் கனமோசப் பயல்-- அகங்காரம் என்னும் பொல்லா அடவாதிப் பயல்--- இப்படி---- ஏழு வடிவங்களில் மனிதனை ஆட்டுவிக்கிறது மனம் என்று பட்டியல் இடுகிறார் வள்ளல் பெருமான்! மனம் என்னும் மதம் பிடித்த யானையை அடக்கும் அங்குசம்தான்  எது..? அறிந்துகொள்ள வாருங்கள்.. வள்ளல்  பெருமான் வழியில்..!

சாதித்துக் காட்டிய சரித்திரப் புருஷர்!

நினைந்து நினைந்து உணர்ந்து உணர்ந்து நெகிழ்ந்து நெகிழ்ந்து அன்பே நிறைந்து நிறைந்து ஊற்று எழும் கண்ணீர் அதனால் உடம்பு நனைந்து நனைந்து.... என்று  உருகித் திளைப்பார் வள்ளலார். நம் கவிஞர்களும் ஞானிகளும்   பெரும்பாலும்  அழுதவர்கள்தான்! அழுதால் உன்னைப் பெறலாமே என்பார்.. மாணிக்கவாசகர். மார்பாரப் பொழிகண்ணீர்.. மழைவாரும்  இணைவிழிகள்!  இது-- அப்பர் பெருமானின்     அருள் பிழியும் தோற்றம்! நெஞ்சு பொறுக்குதில்லையே..என்று  நாட்டுக்காக  அழுதார்   கவியரசர் பாரதியார்! இதுபோல் அழுதுள்ளனர்-- இன்னும் பலர்!  ஆனால்...  வள்ளல் பெருமான் ஒருவர்தான்   அழுகையை அர்த்தப் படுத்தினார்!! அழுதுநிற்பதால் பயன்என்ன? அழுவதே தீர்வாகுமா? அழுவது  மட்டுமே அருளாகுமா? மண்ணுலகதனில் உயிர்கள்தாம்  வருந்தும் வருத்தத்தைக்  கண்ணுறப் பார்த்தும் செவியுறக் கேட்டும்  கணமும் நான் சகித்திட மாட்டேன்..! ---என்றெல்லாம்   வள்ளல் பெருமான்  நைந்துயிர்வாடி நவின்றதோடு நின்றாரா? இல்லை--இல்லை--! இல்லவே இல்லை! அதுதான் அவர்தம் தனித் தன்மை! உயிர்   இரக்கம்-அன்ன விரயம்-- சாலை -சபை என்று  சாதித்துக் காட்டிய