பறவையைக் கொன்றால் மறுபடி பறக்குமா!
புலால் உண்பது பொறிகளை அழிக்கும்! புன்புலால் யாக்கை வளர்ப்ப தற்காக புலால் உண்பதால் கெடுதியே சிறக்கும்! தாவர உணவே சாத்வீக உணவு! அதுவே இயற்கையாய் அமைந்த உணவு ! ஆருயிர் கொல்லாத அறிவார்ந்த உணவு! ஆமாம்..அதுசரி..!அப்படி என்றால் தழைத்து வளரும் தாவரங்க ளான மரமும் – நெல்லும் – மாடுண்ணும் புல்லும் உணர்ந்து பார்த்தால் உயிர்கள் தானே ! தாவர உயிர்கள் தம்மை அழித்து நா- அரும்பெல்லாம் நத்திடச் சுவைக்கும் அந்தச் செயலும் அகிம்சைக்கு எதிராய் ஆவது தானே ..? அதுகுற்றம் இல்லையா..? ஜீவ காருண்யம் என்று பார்த்தால் தாவ ரங்களை அழிப்பதும் பாவம்! தாவ ரங்களை உண்பதும் பாவம் ! என்பதில் அர்த்தம் எதுவும் இல்லையா! இல்லை என்கிறார் எம்பெரு மானார்! ஓரறி வுடைய உயிர்களுக் குள்ளும் ஜீவ விளக்கம் உண்டென் றாலும் பூக்கள்,காய்கள்,கனிகள் ,கிழங்குகள் தழைகள் கீரைகள் வித்துகள் யாவும் உயிர்கள் தோன்றும் இடங்களே அன்றி அவைகளே உயிராய்க் காண்பது இல்லை! அவற்றில் தனியாய் உயிரும் இல்லை! மண்ணும் நீரும் வித்தும் சேர்ந்தே உயிர்கள் தோன்றும் உலகில்;ஆதலால் அவற்றைப் பறிப்பதும் உண்பதும் அவற்றை ஊறு செய்வதாய் ஒருபோதும் எண்