*அழுகையே தொழுகையாய் ஆகுமா?* 'நினைந்து நினைந்து உணர்ந்து உணர்ந்து நெகிழ்ந்து நெகிழ்ந்து அன்பே நிறைந்து நிறைந்து ஊற்று எழும் கண்ணீர் அதனால் உடம்பு நனைந்து நனைந்து...நம்முரிமை நாயகனை வனைந்து வனைந்து ஏத்துதும் வம்மின் உலகியலீர்' என்று வாழ்வியல் நெறிகளை வகுத்துக் கூறி நெய்யாய் நெக்குருகி நேயம் வளர்த்தவர் வள்ளலார். அல்லல்பட்டு ஆற்றாது அழுது புலம்பி, அவலத்தில் சிக்கிக்கிடக்கும் ஆன்மாக்களுக்காக-அழுகையைப் புதுவிதமான தொழுகையாக்கிய மெழுகுவர்த்தி ...அவர். நம் தமிழ்க்கவிஞர்களும் நாயன்மார்களும் ஞானிகளும் பெரும்பாலும் அருளமுதம் பெற்று ஆனந்திக்க வேண்டி, அடிவாரம் நனைய அழுதவர்கள்தான்! 'யானே பொய்..என் நெஞ்சும் பொய்.ஆனால் வினையேன் அழுதால் உன்னைப் பெறலாமே' என்பார்.. வான்கலந்த மாணிக்கவாசகர். 'காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி' நிற்பார் ஞானசம்பந்தர். 'மார்பாரப் பொழிகண்ணீர்.. மழைவாரும் இணைவிழிகள்!' என்பது அப்பர் பெருமானின் அருள் பிழியும் தோற்றம்! 'நெஞ்சு பொறுக்குதில்லையே..இந்த நிலைகெட்ட மாந்தரை நினைந்துவிட்டால்..' என்று நாட்டுக்காகப் பாட்டில் அ
Posts
- Get link
- X
- Other Apps
தைப்பூசச் சொற்பொழிவு வரும் சவரி 2018 தைப்பூச நாள் அன்று வடலூர் மேட்டுக்குப்பத்தில் எரவாஞ்சேரி அன்னம்பாலிப்பு அறக்கட்டளை விழாவில் காலை10 மணிக்குப் பேசுகிறேன். பிற்பகல் மாயவரம் வேத சன்மார்க்க சங்கத்திலும் மாலை திருவண்ணாமலை பாபு சாது சங்கத்திலும் உரையாற்றுகிறேன். முதல்நாள் 30ஆம் தேதி இரவு காரைக்கால் கீழக்காசாக்குடி சங்கத்தில் சொற்பொழிவு செய்கிறேன். அண்மை அன்பர்கள் வருக!
மனிதனை ஆட்டுவிக்கிறது மனம்..!
- Get link
- X
- Other Apps
மனமெனும் ஓர் மடப் பயல்-- பன்முகம் சேர்மனம் என்கிற பரியாசப் பயல்--- விரிந்த மனம் என்னும் சிறிய விளையாட்டுப் பயல்--- பாய்மனம் என்னும் முரட்டுப் பயல்--- மயங்கு புத்தி என்னும் உலக வழக்காளிப் பயல்--- கலையறியாச் சித்தம் என்னும் கனமோசப் பயல்-- அகங்காரம் என்னும் பொல்லா அடவாதிப் பயல்--- இப்படி---- ஏழு வடிவங்களில் மனிதனை ஆட்டுவிக்கிறது மனம் என்று பட்டியல் இடுகிறார் வள்ளல் பெருமான்! மனம் என்னும் மதம் பிடித்த யானையை அடக்கும் அங்குசம்தான் எது..? அறிந்துகொள்ள வாருங்கள்.. வள்ளல் பெருமான் வழியில்..!
சாதித்துக் காட்டிய சரித்திரப் புருஷர்!
- Get link
- X
- Other Apps
நினைந்து நினைந்து உணர்ந்து உணர்ந்து நெகிழ்ந்து நெகிழ்ந்து அன்பே நிறைந்து நிறைந்து ஊற்று எழும் கண்ணீர் அதனால் உடம்பு நனைந்து நனைந்து.... என்று உருகித் திளைப்பார் வள்ளலார். நம் கவிஞர்களும் ஞானிகளும் பெரும்பாலும் அழுதவர்கள்தான்! அழுதால் உன்னைப் பெறலாமே என்பார்.. மாணிக்கவாசகர். மார்பாரப் பொழிகண்ணீர்.. மழைவாரும் இணைவிழிகள்! இது-- அப்பர் பெருமானின் அருள் பிழியும் தோற்றம்! நெஞ்சு பொறுக்குதில்லையே..என்று நாட்டுக்காக அழுதார் கவியரசர் பாரதியார்! இதுபோல் அழுதுள்ளனர்-- இன்னும் பலர்! ஆனால்... வள்ளல் பெருமான் ஒருவர்தான் அழுகையை அர்த்தப் படுத்தினார்!! அழுதுநிற்பதால் பயன்என்ன? அழுவதே தீர்வாகுமா? அழுவது மட்டுமே அருளாகுமா? மண்ணுலகதனில் உயிர்கள்தாம் வருந்தும் வருத்தத்தைக் கண்ணுறப் பார்த்தும் செவியுறக் கேட்டும் கணமும் நான் சகித்திட மாட்டேன்..! ---என்றெல்லாம் வள்ளல் பெருமான் நைந்துயிர்வாடி நவின்றதோடு நின்றாரா? இல்லை--இல்லை--! இல்லவே இல்லை! அதுதான் அவர்தம் தனித் தன்மை! உயிர் இரக்கம்-அன்ன விரயம்-- சாலை -சபை என்று சாதித்துக் காட்டிய
பறவையைக் கொன்றால் மறுபடி பறக்குமா!
- Get link
- X
- Other Apps
புலால் உண்பது பொறிகளை அழிக்கும்! புன்புலால் யாக்கை வளர்ப்ப தற்காக புலால் உண்பதால் கெடுதியே சிறக்கும்! தாவர உணவே சாத்வீக உணவு! அதுவே இயற்கையாய் அமைந்த உணவு ! ஆருயிர் கொல்லாத அறிவார்ந்த உணவு! ஆமாம்..அதுசரி..!அப்படி என்றால் தழைத்து வளரும் தாவரங்க ளான மரமும் – நெல்லும் – மாடுண்ணும் புல்லும் உணர்ந்து பார்த்தால் உயிர்கள் தானே ! தாவர உயிர்கள் தம்மை அழித்து நா- அரும்பெல்லாம் நத்திடச் சுவைக்கும் அந்தச் செயலும் அகிம்சைக்கு எதிராய் ஆவது தானே ..? அதுகுற்றம் இல்லையா..? ஜீவ காருண்யம் என்று பார்த்தால் தாவ ரங்களை அழிப்பதும் பாவம்! தாவ ரங்களை உண்பதும் பாவம் ! என்பதில் அர்த்தம் எதுவும் இல்லையா! இல்லை என்கிறார் எம்பெரு மானார்! ஓரறி வுடைய உயிர்களுக் குள்ளும் ஜீவ விளக்கம் உண்டென் றாலும் பூக்கள்,காய்கள்,கனிகள் ,கிழங்குகள் தழைகள் கீரைகள் வித்துகள் யாவும் உயிர்கள் தோன்றும் இடங்களே அன்றி அவைகளே உயிராய்க் காண்பது இல்லை! அவற்றில் தனியாய் உயிரும் இல்லை! மண்ணும் நீரும் வித்தும் சேர்ந்தே உயிர்கள் தோன்றும் உலகில்;ஆதலால் அவற்றைப் பறிப்பதும் உண்பதும் அவற்றை ஊறு செய்வதாய் ஒருபோதும் எண்
ஆயத்தம் செய்வோமா..?
- Get link
- X
- Other Apps
ஒரு மனிதர்.. ஒரு மாமனிதர் .. உடம்போடு உள் நுழைந்து மறைந்த ஓரிடம்... தமிழ்நாட்டில் தான் உள்ளது..! அவ்விடம்.... பெருமான் திருவறைக்குள்.. திருக்காப்பிட்டுக் கொண்டு ஜோதிமயமாய் இறைவனோடு இரண்டறக் கலந்து.. ஞான சித்தி பெற்ற.. சித்தி வளாகம் ஆகும்! சித்தி வளாகத்தைச் சித்தத்தால் தொழுது சிந்தனையை முறைப்படுத்தினால்.. ஆன்ம ஒளி நமக்கு அறிமுகமாகும்..! அறிமுகம் நம்மைப் புதுமுகம் ஆக்கும்! ஆயத்தம் செய்வோமா..?