Posts

பறவையைக் கொன்றால் மறுபடி பறக்குமா!

Image
புலால் உண்பது பொறிகளை அழிக்கும்! புன்புலால் யாக்கை வளர்ப்ப தற்காக புலால் உண்பதால் கெடுதியே சிறக்கும்! தாவர உணவே சாத்வீக உணவு! அதுவே இயற்கையாய் அமைந்த உணவு ! ஆருயிர் கொல்லாத அறிவார்ந்த உணவு! ஆமாம்..அதுசரி..!அப்படி என்றால் தழைத்து வளரும் தாவரங்க ளான மரமும் – நெல்லும் – மாடுண்ணும் புல்லும் உணர்ந்து பார்த்தால் உயிர்கள் தானே ! தாவர உயிர்கள் தம்மை அழித்து நா- அரும்பெல்லாம் நத்திடச் சுவைக்கும் அந்தச் செயலும் அகிம்சைக்கு எதிராய் ஆவது தானே ..? அதுகுற்றம் இல்லையா..? ஜீவ காருண்யம் என்று பார்த்தால் தாவ ரங்களை அழிப்பதும் பாவம்! தாவ ரங்களை உண்பதும் பாவம் ! என்பதில் அர்த்தம் எதுவும் இல்லையா! இல்லை என்கிறார் எம்பெரு மானார்! ஓரறி வுடைய உயிர்களுக் குள்ளும் ஜீவ விளக்கம் உண்டென் றாலும் பூக்கள்,காய்கள்,கனிகள் ,கிழங்குகள் தழைகள் கீரைகள் வித்துகள் யாவும் உயிர்கள் தோன்றும் இடங்களே அன்றி அவைகளே உயிராய்க் காண்பது இல்லை! அவற்றில் தனியாய் உயிரும் இல்லை! மண்ணும் நீரும் வித்தும் சேர்ந்தே உயிர்கள் தோன்றும் உலகில்;ஆதலால் அவற்றைப் பறிப்பதும் உண்பதும் அவற்றை ஊறு செய்வதாய் ஒருபோதும் எண்...

ஆயத்தம் செய்வோமா..?

Image
ஒரு மனிதர்.. ஒரு மாமனிதர் .. உடம்போடு உள் நுழைந்து மறைந்த  ஓரிடம்... தமிழ்நாட்டில் தான்  உள்ளது..!  அவ்விடம்.... பெருமான் திருவறைக்குள்.. திருக்காப்பிட்டுக் கொண்டு ஜோதிமயமாய் இறைவனோடு இரண்டறக் கலந்து.. ஞான சித்தி பெற்ற.. சித்தி வளாகம் ஆகும்! சித்தி வளாகத்தைச் சித்தத்தால் தொழுது சிந்தனையை முறைப்படுத்தினால்.. ஆன்ம ஒளி நமக்கு அறிமுகமாகும்..! அறிமுகம் நம்மைப் புதுமுகம் ஆக்கும்! ஆயத்தம் செய்வோமா..? 

அவரைப் பின்பற்றுவோம்..!

Image
மும்மொழிப் பாடசாலை...தமிழ்  நாட்டில்  முதன்முதலில் ஏற்படுத்தியவர் ... முதியோர் கல்வியை முதன்முதலில்  ஏற்படுத்தியவர்...   முற்போக்குச்  சிந்தனையின்  மூல புருஷராக விளங்கிய  முத்தமிழ்   ஞானி..  வள்ளல் பெருமான் என்பதை நினைக்கையில்  இதயமெலாம் பூரிப்பும்  புத்துணர்வும் எழுகிறது! அதே சமயம் --- அவரைப்    பின்பற்றுவதில்  எவ்வளவு பின்தங்கி விட்டோம்  நாமென்று நினைக்கையில்  வேதனை நெஞ்சை விழுங்குகிறது! அவரைப் போன்ற சீர்திருத்தவாதி  ஆருமில்லை  அவர்தம் நூற்றாண்டில்! அகிலம் கண்விழிக்க  அவரைப் பின்பற்றுவோம்..!     

ஒரு நல்லாட்சி எப்படி இருக்க வேண்டும்..?

ஒரு  நல்லாட்சி எப்படி இருக்க வேண்டும் என்று வள்ளல் பெருமான்  ஒரு வரையறை செய்கிறார்.. ஒவ்வொரு ஆட்சியாளரும்  இந்த  வரைமுறை பற்றி  ஒருமுறையேனும் சிந்தித்தால்.. மாபெரும் மாற்றங்கள் மலரும்! மனம் வைப்பார்களா  மனிதர்கள் என்பதுதான்  மகத்தான  கேள்வியாக இருக்கிறது..! பெருமான் பகர்கிறார்: ஒரு நாட்டில்.. பறிபடுவது...பூவாக இருக்கவேண்டும்..!  சிறைப் படுவது..புனலாக இருக்கவேண்டும்..!  அலைபடுவது.. காற்றாக..இருக்கவேண்டும்..!  கடினம் உடையது.. கல்லாக இருக்கவேண்டும்..!  வடுப் படுவது..மாவாக (மாமரமாக) இருக்கவேண்டும்..!  குலைப் படுவது.. வாழையாக..இருக்கவேண்டும்..!  மதுவுண்பது..வண்டாக இருக்கவேண்டும்..!  அடிபடுவது பந்தாக..இருக்கவேண்டும்..!  கட்டிக் கிடந்து உண்பது..பரியாக (குதிரையாக)..இருக்கவேண்டும்..!  குத்துப் படுவது.. நெல்லாக இருக்கவேண்டும்..!  போரில் படுவது..நெற்கதிராக   இருக்கவேண்டும்..!   வலை படுவது..வயலாக இருக்கவேண்டும்..!  குறைபடுவது..மாதர் இடைய...

திருவருட் பிரகாச வள்ளலார் மனிதவள மேம்பாட்டு அறக் கட்டளை தொடக்க விழா

Image
திருவருட்  பிரகாச   வள்ளலார் மனிதவள மேம்பாட்டு அறக் கட்டளை தொடக்க விழாவில் கங்கை மணிமாறன் பட்டிமன்ற நடுவராக... திருவருட்  பிரகாச   வள்ளலார் மனிதவள மேம்பாட்டு அறக் கட்டளை தொடக்க விழாவில் கங்கை மணிமாறன் பட்டிமன்ற நடுவராக...    அறக் கட்டளையின் "சாலைச் சோலை" திட்டத்தின் கீழ் மரக் கன்று நடுகிறார் பூம்புகார் சட்டப் பேரவை உறுப்பினர் திருமிகு. எஸ் .பவுன் ராஜ் அவர்கள்  அறக் கட்டளையின் "சாலைச் சோலை" திட்டத்தின் கீழ் உள்ளூர்ப் பள்ளியில் மரக் கன்று நட்டு நீரூற்றுகிறார் கங்கை மணிமாறன் 

சகல துன்பங்களுக்கும் சரியான காரணம்...

Image
 அன்னதானத்தில் சில காட்சிகள்  உலகத்  துன்பங்களுக்கு  எல்லாம் உண்மையான காரணம் எது என்று உலக ஞானிகள் ஒவ்வொருவரும் உயிரைப் பிசைந்து ஆராய்ச்சி செய்தார்கள்! சகல   துன்பங்களுக்கும் சரியான காரணம்... ஆசையே என்று அனைவரும் முடிவு சொன்னார்கள்! ஆசையே துன்பங்களுக்குக் காரணம் அதை விட்டொழியுங்கள் என்று உயிர்வலிக்க உபதேசித்தார்கள்! வள்ளலார் அதை மறுக்கவில்லை! உண்மைதான் என்று ஒப்புக் கொள்கிறார்! ஆனால்..அதே சமயம் அதைவிட அழுத்தமான .. அடிப்படையான காரணம் ஒன்று உண்டு என்று கண்டுபிடிக்கிறார் பெருமான்! சகல   துன்பங்களுக்கும் சரியான காரணம்... அதுதான் பசி என்பது! பசிதான் படரும் துன்பங்களுக்கு எல்லாம்.... தொடரும் கொடுமைகளுக்கு எல்லாம் காரணம் என்று பெருமான் அழுத்தமாய் நம்பினார். ஆசையற்றவர்கள் அகிலத்தில் உண்டு! பாரில் எங்கும் பசியற்றவர்கள் உண்டா! அப்பர் பெருமானுக்கு ஆசை இல்லை! ஆனால்.. பசி இருந்தது! ஆண்டவனே கட்டுச் சோறு கொண்டு வந்தான்! சுந்தரருக்கு ஆசை இல்லை! ஆனால் பசி இருந்தது! ஆண்டவனே பிச்சை ஏற்று  வந்து ஊட்டினான்! பட்டினத்தாருக்கு ...

அருளாளர் பண்பு!

Image
அடக்கம் அமரருள் உய்க்கும் என்றார்  அறிஞருள் அறிஞர் வள்ளுவனார்! கைகளை வீசி நடக்கவும் பயந்து  கைகளைக் கட்டியே நடந்த பெருமான்  அடக்கத்தின் பேருருவமாகத் திகழ்ந்தவர்! கருங்குழியில் அவர் வதிந்த போது, தண்ணீரால் விளக்கெரிந்த அற்புதம் நிகழ்ந்தது! அடியார்கள் அந்த அருட்திறத்தில்   நெகிழ்ந்து  பெருமானை வியந்து போற்றத் தொடங்கினர்.  எம்பெருமானோ..இவ்வாறு பாடினார்! "நெய் விளக்கே போன்று ஒரு தண்ணீர் விளக்கும் எரிந்தது : சந்நிதியின் முன்னே    ..!"  நெய் விளக்கு என்னால் ..என் அருட் திறத்தால் ..எரியவில்லை! அது அருட்பெருஞ்சோதி ஆண்டவர் அருளால் .. அவர் சந்நிதியின் முன்னே எரிந்தது! ---என்பதை  அழுத்தமாய் எடுத்துக் காட்டுகிறார் பெருமான்!  என்னே அவர்தம் அடக்கம்!  தன்னை வியத்தல் என்பது மனிதப் பண்பு!   தன்னை மறத்தல் தானே ..அருளாளர் பண்பு!