ஒரு நல்லாட்சி எப்படி இருக்க வேண்டும்..?

ஒரு  நல்லாட்சி எப்படி இருக்க வேண்டும்
என்று
வள்ளல் பெருமான் 
ஒரு வரையறை செய்கிறார்..


ஒவ்வொரு ஆட்சியாளரும் 
இந்த 
வரைமுறை பற்றி 
ஒருமுறையேனும் சிந்தித்தால்..
மாபெரும் மாற்றங்கள்
மலரும்!


மனம் வைப்பார்களா 
மனிதர்கள் என்பதுதான் 
மகத்தான 
கேள்வியாக இருக்கிறது..!

பெருமான் பகர்கிறார்:
ஒரு நாட்டில்..
பறிபடுவது...பூவாக இருக்கவேண்டும்..! 
சிறைப் படுவது..புனலாக இருக்கவேண்டும்..! 
அலைபடுவது.. காற்றாக..இருக்கவேண்டும்..! 
கடினம் உடையது.. கல்லாக இருக்கவேண்டும்..! 


வடுப் படுவது..மாவாக (மாமரமாக) இருக்கவேண்டும்..! 
குலைப் படுவது.. வாழையாக..இருக்கவேண்டும்..! 
மதுவுண்பது..வண்டாக இருக்கவேண்டும்..! 
அடிபடுவது பந்தாக..இருக்கவேண்டும்..! 


கட்டிக் கிடந்து உண்பது..பரியாக (குதிரையாக)..இருக்கவேண்டும்..! 
குத்துப் படுவது.. நெல்லாக இருக்கவேண்டும்..! 
போரில் படுவது..நெற்கதிராக   இருக்கவேண்டும்..!  
வலை படுவது..வயலாக இருக்கவேண்டும்..! 


குறைபடுவது..மாதர் இடையாக இருக்கவேண்டும்..! 
தரித்திரமே ..தரித்திரப்படுவதாக  இருக்கவேண்டும்..! 
துக்கமே ..துக்கப் படுவதாக இருக்கவேண்டும்..! 
பொய்யே.... பொய்படுவதாக இருக்கவேண்டும்..! 


அதுதான் நல்லாட்சியாக 
இருக்கும் என்கிறார் பெருமான்!


மனுமுறை கண்ட வாசகத்தில் 
மனுநீதிச் சோழன் ஆட்சி 
இப்படி இருந்ததாக 
பெருமான் குறிப்பிடுகிறார்!


அற்புதமான   உரைநடையில் 
ஆவலூட்டுகிற சிந்தனையை
அனைவரும் வியக்கும் படியான
ஆழமான நோக்கில் 
வெளிப் படுத்துகிறார் அவர்!


  
வள்ளலார் என்னும் சாகரத்தில் 
மூழ்கிக் குளித்தால் 
உள்ளுதொறும் உள்ளுதொறும்
உவப்பூட்டும்  
இதுபோன்ற உயரிய முத்துக்கள் 
எத்தனையோ கிடைக்கும்! 




  




Comments

Popular posts from this blog

திருவருட் பிரகாச வள்ளலார் மனிதவள மேம்பாட்டு அறக் கட்டளை தொடக்க விழா

மனிதனை ஆட்டுவிக்கிறது மனம்..!

அருட்பாவால் ஆண்டவர்!