அருளாளர் பண்பு!
அடக்கம் அமரருள் உய்க்கும் என்றார்
அறிஞருள் அறிஞர் வள்ளுவனார்!
கைகளை வீசி நடக்கவும் பயந்து
கைகளைக் கட்டியே நடந்த பெருமான்
அடக்கத்தின் பேருருவமாகத் திகழ்ந்தவர்!
கருங்குழியில் அவர் வதிந்த போது,
தண்ணீரால் விளக்கெரிந்த அற்புதம் நிகழ்ந்தது!
அடியார்கள் அந்த அருட்திறத்தில் நெகிழ்ந்து
பெருமானை வியந்து போற்றத் தொடங்கினர்.
எம்பெருமானோ..இவ்வாறு பாடினார்!
"நெய் விளக்கே போன்று ஒரு தண்ணீர் விளக்கும் எரிந்தது :
சந்நிதியின் முன்னே ..!"
நெய் விளக்கு என்னால் ..என் அருட் திறத்தால் ..எரியவில்லை!
அது அருட்பெருஞ்சோதி ஆண்டவர் அருளால் ..
அவர் சந்நிதியின் முன்னே எரிந்தது! ---என்பதை
அழுத்தமாய் எடுத்துக் காட்டுகிறார் பெருமான்!
என்னே அவர்தம் அடக்கம்!
தன்னை வியத்தல் என்பது மனிதப் பண்பு!
தன்னை மறத்தல் தானே ..அருளாளர் பண்பு!

Comments
Post a Comment