சகல துன்பங்களுக்கும் சரியான காரணம்...


அன்னதானத்தில் சில காட்சிகள்


உலகத்  துன்பங்களுக்கு  எல்லாம்
உண்மையான காரணம் எது என்று
உலக ஞானிகள் ஒவ்வொருவரும்
உயிரைப் பிசைந்து ஆராய்ச்சி செய்தார்கள்!

சகல   துன்பங்களுக்கும்
சரியான காரணம்...
ஆசையே என்று
அனைவரும் முடிவு சொன்னார்கள்!
ஆசையே துன்பங்களுக்குக் காரணம்
அதை விட்டொழியுங்கள் என்று
உயிர்வலிக்க உபதேசித்தார்கள்!

வள்ளலார் அதை மறுக்கவில்லை!
உண்மைதான் என்று ஒப்புக் கொள்கிறார்!
ஆனால்..அதே சமயம்
அதைவிட அழுத்தமான ..
அடிப்படையான
காரணம் ஒன்று உண்டு என்று
கண்டுபிடிக்கிறார் பெருமான்!


சகல   துன்பங்களுக்கும்
சரியான காரணம்... அதுதான் பசி என்பது!
பசிதான் படரும் துன்பங்களுக்கு எல்லாம்....
தொடரும் கொடுமைகளுக்கு எல்லாம் காரணம்
என்று பெருமான்
அழுத்தமாய் நம்பினார்.
ஆசையற்றவர்கள்
அகிலத்தில் உண்டு!
பாரில் எங்கும்
பசியற்றவர்கள் உண்டா!

அப்பர் பெருமானுக்கு
ஆசை இல்லை!
ஆனால்.. பசி இருந்தது!
ஆண்டவனே கட்டுச் சோறு கொண்டு வந்தான்!

சுந்தரருக்கு ஆசை இல்லை!
ஆனால் பசி இருந்தது!
ஆண்டவனே பிச்சை ஏற்று  வந்து
ஊட்டினான்!

பட்டினத்தாருக்கு ஆசை இல்லை!
பசி இருந்தது!
என் பசிக்கு   அன்னம்
என் இடம் தேடிவந்து தந்தால்
புசிப்பேன் என்று புதுமை செய்தார்!

வள்ளல் பெருமானுக்கு
ஆசை இல்லை!
பசி இருந்தது!
ஒற்றியூர் வடிவுடை அம்மையே
அண்ணியார் வடிவில் வந்து
அமுதூட்டினார்!

ஒன்று தெரிகிறது!
ஞானிகளுக்கு எல்லாம்
ஆசை இல்லவே இல்லை!
ஆனால் பசி இருந்தது!

ஆகவேதான் ...
வள்ளல் பெருமான்
பசிப் பிணியைப் போக்க
தருமசாலையைத் தொடங்கினார்!
பசித்தீயை அவிக்க
அடுப்புத் தீயை மூட்டினார்!

அவர்தம் கருணையே கருணை!
அவர்தம் பார்வையே பார்வை!
இப்போது தெரிகிறதா..
அவரை  ஏன் 
புரட்சித் துறவி என்கிறோம் என்று..! 
  


தவத்திரு. குலபதி குப்புசாமி அய்யா அவர்களும்
கும்பகோணம் கொட்டையூர் சாதனா
நிகேதனா நிறுவனர்
ஐயா ராமதாஸ் அண்ணா அவர்களும்

நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகு ஒரே மேடையில் சந்திக்கும்
கண்கொள்ளாக்    காட்சி.   










Comments

Popular posts from this blog

திருவருட் பிரகாச வள்ளலார் மனிதவள மேம்பாட்டு அறக் கட்டளை தொடக்க விழா

மனிதனை ஆட்டுவிக்கிறது மனம்..!

அருட்பாவால் ஆண்டவர்!