Posts

நல்ல பிள்ளையாக..!

ஞான சபைத் தலைவனுக்கு  நல்ல பிள்ளையாக  நாமிருக்க வேண்டாவா..? வேண்டும்தானே! முதலில் .. வடலூர் பெருமானின்  வாழ்வியல் கருத்துகளை  மனத்தில் இருத்தி  வாயுற வாழ்த்துவோம்  வாருங்கள்!      

மனிதனை ஆட்டுவிக்கிறது மனம்..!

மனமெனும் ஓர் மடப்  பயல்-- பன்முகம் சேர்மனம் என்கிற பரியாசப்   பயல்--- விரிந்த மனம் என்னும் சிறிய விளையாட்டுப் பயல்---  பாய்மனம் என்னும் முரட்டுப் பயல்---  மயங்கு புத்தி  என்னும் உலக வழக்காளிப் பயல்--- கலையறியாச் சித்தம் என்னும் கனமோசப் பயல்-- அகங்காரம் என்னும் பொல்லா அடவாதிப் பயல்--- இப்படி---- ஏழு வடிவங்களில் மனிதனை ஆட்டுவிக்கிறது மனம் என்று பட்டியல் இடுகிறார் வள்ளல் பெருமான்! மனம் என்னும் மதம் பிடித்த யானையை அடக்கும் அங்குசம்தான்  எது..? அறிந்துகொள்ள வாருங்கள்.. வள்ளல்  பெருமான் வழியில்..!

சாதித்துக் காட்டிய சரித்திரப் புருஷர்!

நினைந்து நினைந்து உணர்ந்து உணர்ந்து நெகிழ்ந்து நெகிழ்ந்து அன்பே நிறைந்து நிறைந்து ஊற்று எழும் கண்ணீர் அதனால் உடம்பு நனைந்து நனைந்து.... என்று  உருகித் திளைப்பார் வள்ளலார். நம் கவிஞர்களும் ஞானிகளும்   பெரும்பாலும்  அழுதவர்கள்தான்! அழுதால் உன்னைப் பெறலாமே என்பார்.. மாணிக்கவாசகர். மார்பாரப் பொழிகண்ணீர்.. மழைவாரும்  இணைவிழிகள்!  இது-- அப்பர் பெருமானின்     அருள் பிழியும் தோற்றம்! நெஞ்சு பொறுக்குதில்லையே..என்று  நாட்டுக்காக  அழுதார்   கவியரசர் பாரதியார்! இதுபோல் அழுதுள்ளனர்-- இன்னும் பலர்!  ஆனால்...  வள்ளல் பெருமான் ஒருவர்தான்   அழுகையை அர்த்தப் படுத்தினார்!! அழுதுநிற்பதால் பயன்என்ன? அழுவதே தீர்வாகுமா? அழுவது  மட்டுமே அருளாகுமா? மண்ணுலகதனில் உயிர்கள்தாம்  வருந்தும் வருத்தத்தைக்  கண்ணுறப் பார்த்தும் செவியுறக் கேட்டும்  கணமும் நான் சகித்திட மாட்டேன்..!...

பறவையைக் கொன்றால் மறுபடி பறக்குமா!

Image
புலால் உண்பது பொறிகளை அழிக்கும்! புன்புலால் யாக்கை வளர்ப்ப தற்காக புலால் உண்பதால் கெடுதியே சிறக்கும்! தாவர உணவே சாத்வீக உணவு! அதுவே இயற்கையாய் அமைந்த உணவு ! ஆருயிர் கொல்லாத அறிவார்ந்த உணவு! ஆமாம்..அதுசரி..!அப்படி என்றால் தழைத்து வளரும் தாவரங்க ளான மரமும் – நெல்லும் – மாடுண்ணும் புல்லும் உணர்ந்து பார்த்தால் உயிர்கள் தானே ! தாவர உயிர்கள் தம்மை அழித்து நா- அரும்பெல்லாம் நத்திடச் சுவைக்கும் அந்தச் செயலும் அகிம்சைக்கு எதிராய் ஆவது தானே ..? அதுகுற்றம் இல்லையா..? ஜீவ காருண்யம் என்று பார்த்தால் தாவ ரங்களை அழிப்பதும் பாவம்! தாவ ரங்களை உண்பதும் பாவம் ! என்பதில் அர்த்தம் எதுவும் இல்லையா! இல்லை என்கிறார் எம்பெரு மானார்! ஓரறி வுடைய உயிர்களுக் குள்ளும் ஜீவ விளக்கம் உண்டென் றாலும் பூக்கள்,காய்கள்,கனிகள் ,கிழங்குகள் தழைகள் கீரைகள் வித்துகள் யாவும் உயிர்கள் தோன்றும் இடங்களே அன்றி அவைகளே உயிராய்க் காண்பது இல்லை! அவற்றில் தனியாய் உயிரும் இல்லை! மண்ணும் நீரும் வித்தும் சேர்ந்தே உயிர்கள் தோன்றும் உலகில்;ஆதலால் அவற்றைப் பறிப்பதும் உண்பதும் அவற்றை ஊறு செய்வதாய் ஒருபோதும் எண்...

ஆயத்தம் செய்வோமா..?

Image
ஒரு மனிதர்.. ஒரு மாமனிதர் .. உடம்போடு உள் நுழைந்து மறைந்த  ஓரிடம்... தமிழ்நாட்டில் தான்  உள்ளது..!  அவ்விடம்.... பெருமான் திருவறைக்குள்.. திருக்காப்பிட்டுக் கொண்டு ஜோதிமயமாய் இறைவனோடு இரண்டறக் கலந்து.. ஞான சித்தி பெற்ற.. சித்தி வளாகம் ஆகும்! சித்தி வளாகத்தைச் சித்தத்தால் தொழுது சிந்தனையை முறைப்படுத்தினால்.. ஆன்ம ஒளி நமக்கு அறிமுகமாகும்..! அறிமுகம் நம்மைப் புதுமுகம் ஆக்கும்! ஆயத்தம் செய்வோமா..? 

அவரைப் பின்பற்றுவோம்..!

Image
மும்மொழிப் பாடசாலை...தமிழ்  நாட்டில்  முதன்முதலில் ஏற்படுத்தியவர் ... முதியோர் கல்வியை முதன்முதலில்  ஏற்படுத்தியவர்...   முற்போக்குச்  சிந்தனையின்  மூல புருஷராக விளங்கிய  முத்தமிழ்   ஞானி..  வள்ளல் பெருமான் என்பதை நினைக்கையில்  இதயமெலாம் பூரிப்பும்  புத்துணர்வும் எழுகிறது! அதே சமயம் --- அவரைப்    பின்பற்றுவதில்  எவ்வளவு பின்தங்கி விட்டோம்  நாமென்று நினைக்கையில்  வேதனை நெஞ்சை விழுங்குகிறது! அவரைப் போன்ற சீர்திருத்தவாதி  ஆருமில்லை  அவர்தம் நூற்றாண்டில்! அகிலம் கண்விழிக்க  அவரைப் பின்பற்றுவோம்..!     

ஒரு நல்லாட்சி எப்படி இருக்க வேண்டும்..?

ஒரு  நல்லாட்சி எப்படி இருக்க வேண்டும் என்று வள்ளல் பெருமான்  ஒரு வரையறை செய்கிறார்.. ஒவ்வொரு ஆட்சியாளரும்  இந்த  வரைமுறை பற்றி  ஒருமுறையேனும் சிந்தித்தால்.. மாபெரும் மாற்றங்கள் மலரும்! மனம் வைப்பார்களா  மனிதர்கள் என்பதுதான்  மகத்தான  கேள்வியாக இருக்கிறது..! பெருமான் பகர்கிறார்: ஒரு நாட்டில்.. பறிபடுவது...பூவாக இருக்கவேண்டும்..!  சிறைப் படுவது..புனலாக இருக்கவேண்டும்..!  அலைபடுவது.. காற்றாக..இருக்கவேண்டும்..!  கடினம் உடையது.. கல்லாக இருக்கவேண்டும்..!  வடுப் படுவது..மாவாக (மாமரமாக) இருக்கவேண்டும்..!  குலைப் படுவது.. வாழையாக..இருக்கவேண்டும்..!  மதுவுண்பது..வண்டாக இருக்கவேண்டும்..!  அடிபடுவது பந்தாக..இருக்கவேண்டும்..!  கட்டிக் கிடந்து உண்பது..பரியாக (குதிரையாக)..இருக்கவேண்டும்..!  குத்துப் படுவது.. நெல்லாக இருக்கவேண்டும்..!  போரில் படுவது..நெற்கதிராக   இருக்கவேண்டும்..!   வலை படுவது..வயலாக இருக்கவேண்டும்..!  குறைபடுவது..மாதர் இடைய...