"சிக்"கெனப் பிடிக்க......
நெற்றிக் கண்ணைத் திறப்பதற்கு
ஒரு கதவும்,ஒரு பூட்டும் இருக்கிறது!
அந்தப் பூட்டை
அருள் என்னும் திறவுகோலைக் கொண்டு
திறக்க வேண்டும்.
அருள் என்பது..
ஆன்ம இயற்கையாகிய
பெருந்தயவு என்கிறார்-- வள்ளல் பெருமான்!
தயவுதான் நம்மை
மனிதராக்கக் கூடியது!
பசியே கூட
இறைவன் அளித்த ஓர்
உபகாரக் கருவி என்கிறார் பெருமான்!
பசித்தாரைக் கண்டால்
அருள் சுரக்கிறது.
அருள் சுரந்தால் ஜீவகாருண்யம் பிறக்கிறது.
ஜீவ காருண்யமே மோட்ச வீட்டின் திறவுகோல்
என்கிறார் -வள்ளலார்.
எந்த நெருடலும் இல்லாமல்
நெஞ்சம் திறக்கிறதா இல்லையா..?
வள்ளலார் நம்மை வாழ்விக்கவே வந்தவர் -
நாம் தான் அவரைச்
சிக்கெனப் பிடிக்கத் தெரியாமல்
சீரழிந்துவிட்டோம்!
Comments
Post a Comment