நீரூற்ற வேண்டுகிறேன்!
146 ஆண்டுகள்
கடந்துபோய் விட்டன!
சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம்
நிறுவப்பட்டு
146 ஆண்டுகள்
கடந்துபோய் விட்டன!
கல்லாய மனத்தையும் ஒரு கணத்தில் கனிவித்துப்
பல்லோரும் அதிசயிக்க அருட்பக்குவம் தரும்
மகா மந்திரத்தைத் தந்து
146 ஆண்டுகள்
கடந்துபோய் விட்டன!
அருட்பெருஞ்சோதி என்னும்
ஒளிவடிவான
ஒலி மந்திரம் அருளப் பெற்று
146 ஆண்டுகள்
கடந்துபோய் விட்டன!
அன்பு வேண்டும்!
அன்பு கனிந்தால் அருள் தோன்றும்!
அருள் ஜீவகாருண்யம் ஆகும் !
ஜீவ காருண்யம் பேரின்ப வீட்டின் திறவு கோலாகும்!
என்று --
மனிதகுல வாழ்வுக்கு
மகத்தான வழி கண்டு சொல்லி
146 ஆண்டுகள்
கடந்துபோய் விட்டன!
இப்போதுதான்
ஏதோ ஒருசிலரின்
இரும்பு விழித் திரைகள் திறக்கின்றன!
அடைபட்டுக் கிடந்த இரும்புச் செவிகள்
கேட்கின்றன!
ஆம் --நாம் யோசிக்கத் தொடங்கி இருக்கிறோம்!
ஆன்மாவைப் பற்றி
ஒருகடவுள் பற்றி
ஒளியே கடவுள் பற்றி
உயிரே கடவுள் பற்றி
ஆன்மநேய ஒருமைப் பாட்டு உரிமையைப் பற்றி -----
நிறைய யோசிக்கத் தொடங்கி இருக்கிறோம்!
திருவருட் பிரகாச வள்ளலார் மனிதவள மேம்பாட்டு அறக் கட்டளை
என்னும் பெயரில்
ஒரு குக் கிராமத்தில் இருந்து
மக்களுக்கான பணிகளைத் தொடங்கி இருக்கிறோம்!
வள்ளலாரை மாணவச் சமுதாயத்தின் பார்வைக்கும்
கொண்டு செல்வதற்காக
மாபெரும் பேச்சுப் போட்டி
நடத்தவும் திட்டமிட்டிருக்கிறோம் !
ஆகஸ்டு 28 -ஆம்தேதி ஞாயிற்றுக் கிழமை
அறக் கட்டளை விழாவில்
மரக் கன்றுகள் வழங்குதல்--
மக்களுக்கான அன்னதானம் --
மாணவர்களுக்கான பரிசுகள் --
வள்ளல் பெருமானையும்
வள்ளுவரையும் எளிதாக
பாமரரும் புரிந்து கொள்ள --
சமுதாய மாற்றத்திற்குப் பெரிதும் வழி கட்டுபவர் --
வள்ளுவரா..வள்ளலாரா..? என்று
என் தலைமையில்
ஓர் அற்புதப் பட்டி மன்றம் --
இப்படி நீள்கிறது துவக்க விழா!
அறப் பணிக்கான ஆயத்தம் வெல்ல
அறச் சிந்தை படைத்தோர்
அள்ளி வழங்க வேண்டாம்..
கிள்ளி வழங்கினாலே
கிழக்கு வெளுக்கும்!
மயிலாடுதுறை மற்றும் குத்தாலம் வட்டத்தில்
இந்தப் பணி புதியது!
ஆயினும் --
ஒரு மாற்றத்தை ஏற்படுத்தாமல் ஓயாது!
பன்மார்க்கமும் பசையற்றுப் போகவும்
சன்மார்க்கம் ஒன்றே தழைக்கவும்
நிறை அன்புடைய
நேச நெஞ்சங்கள்
நீரூற்ற வேண்டுகிறேன்!
முகவரி: கவிஞர் கங்கை மணிமாறன்
Q43 /1 பத்தாம் தெரு,
அத்திப்பட்டுக் குடியிருப்பு
வடசென்னை மின் நிலையம் (அஞ்சல் )
சென்னை-120
செல்;9443408824
மின்னஞ்சல்: rgangaimanimaran @ gmail .com
குறிப்பு:அழைப்பிதழ் விரைவில் இதே வழியில்
தங்கள் பார்வைக்கு வரும்
Comments
Post a Comment