அன்பு காட்டுவோம் வாருங்கள்!

     இந்த நூற்றாண்டில்கூட பேச முடியாத புரட்சிச் சிந்தனைகளை
அந்த நூற்றாண்டில் அழுத்தம் திருத்தமாக எடுத்துரைத்தவர் வள்ளலார்.
அனைத்து உயிர்களிடத்திலும் அன்புசெய்தல் என்பது அவர்தம் உயிர்க் கொள்கை. 
         வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன் என்று நெஞ்சார நெகிழ்ந்தார் அவர்.
           பயிரைக் கண்டுதான் வாடினாரா..? களையைக் கண்டு வாடவில்லையா ?அதுவும் உயிர்தானே என்றார்-ஒரு நண்பர்.
            நமக்குத்தான் பயிர்,களை என்ற வேறுபாடெல்லாம் !அவருக்கு எல்லாமே ஒன்றுதான் !அதுவாடினாலும் அவர் வாடுவார்!
    ''ஓடும் செம்பொனும் ஒக்கவே "நோக்கினார் அல்லவா அப்பர் பெருமான்! உழவாரப் பணி செய்யும் போது உடைந்த ஓடுகளை அப்புறப் படுத்திக் கொண்டிருந்த அவருக்கு முன் ..பொற்காசுகளும் சிதறிக் கிடந்தன.அவற்றையும் குப்பையாகவே கருதி அவர் தூக்கி எறிய    வில்லையா!அதுபோலத்தான் வள்ளல் பெருமானுக்கு ..பயிராயினும் களையாயினும் ஒன்றுதான்!
     "பணத்திலே சிறிதும் ஆசை ஒன்றிலேன் நான் ! 
        படைத்த அப் பணங்களைப் பலகால் கிணற்றில் எறிந்தேன்  ; 
        குளத்திலும் எறிந்தேன்! கேணியில் எறிந்தனன் எந்தாய்!"-என்று வள்ளல் பெருமானும் பேசியிருக்கிறார்!
     உயிர் இரக்கத்தின் உச்சியாக விளங்கிய அவர் தில்லை நடராசனைப் பற்றி பாடும் போது.."மின்னிடையாள் காண ஆடுகின்றாய்; இணையடிகள் நோவாதோ "?என்று இறைவனிடமும் இரக்கம் காட்டுகிறார். 
    இது ஒன்று போதாதா அவரின் ஜீவ காருண்யம் பற்றித் தெரிந்து கொள்வதற்கு..!
   அந்தப் புரட்சியாளரைப் பின்பற்றி அனைவரிடமும் அன்பு காட்டுவோம் வாருங்கள்!    

Comments

Popular posts from this blog

திருவருட் பிரகாச வள்ளலார் மனிதவள மேம்பாட்டு அறக் கட்டளை தொடக்க விழா

மனிதனை ஆட்டுவிக்கிறது மனம்..!

அருட்பாவால் ஆண்டவர்!