அருட்பாவால் ஆண்டவர்!

நாம் வள்ளல் என்று ஒருவரைச் சொன்னால்
அவரிடம் கையேந்துகிறோம் என்று பொருள்!
ஆம்.. வள்ளலாரிடம் நாம் கையேந்துகிறோம்..!

எதற்காக..!

பொருள் வேண்டும் என்பதற்காக அன்று!
அருள் வேண்டும் என்பதற்காக!

அதுவும் நாம் மட்டுமே  வாழ அன்று!
நம்மைச் சார்ந்தவர்களும் -
நம்மைச் சார்ந்து வாழும் பிற உயிர்களும்
சமத்துவமாய் வாழ!
அவரது வழியில் நின்று ஆன்ம நேயம் சூழ!

அவரது வழியில் நிற்கவும் அவர் அருள் வேண்டும்!
அவரே அருட்பெருஞ்சோதி ஆண்டவரைக் கண்டவர்!
எம்மை அருட்பாவால் ஆண்டவர்!
ஆகவே அவரிடம் கையேந்துவோம்!
அவர் துணையோடு
ஆன்ம நேய ஜோதியை ஏந்துவோம்  !
   

Comments

Popular posts from this blog

திருவருட் பிரகாச வள்ளலார் மனிதவள மேம்பாட்டு அறக் கட்டளை தொடக்க விழா

மனிதனை ஆட்டுவிக்கிறது மனம்..!