சமயம் கடந்த ஞானி!

  வள்ளலாருக்கு முன்பும் அருளாளர்கள் இருந்தனர்.
     பக்திப் பனுவல்கள் புனைந்தனர்.
     பாடல்கள் இசைத்தனர்.
     பலதலம் சென்றனர்.
     பயணம் செய்தனர்.
     பரிவாய் நடந்தனர்.
    ஆனாலும் ..
     வள்ளல் பெருமான் அவர்களிலும் பெரிதும்  மாறுபட்டவர்.
     அவர்களில் பெரும்பாலோர் உபதேசித்தனர்.
     பெருமான் செயலில் இறங்கினார்.
     அவர்கள் அடியார்கள் சிலருக்கு  உணவு தந்தனர்.
    பெருமான்.. பசித்திருப்பவர்கள் அனைவருக்கும்
    உணவு படைக்கவேண்டும் என்று துடித்தார்.
   பசிக் கொடுமையை எவரும் விரித்துரைக்க முடியாத அளவுக்கு விரிவுரை செய்து அதைப் போக்குவதே முதல் பணியாகக் கொண்டார்!
   ஞான சபைக்குள்ளே புறவினத்தார் --அதாவது புலால் உண்பவர் நுழையக்
கூடாது என்று விதித்தவர் --
    சாலைக்குள்ளே அந்தக் கட்டுப்பாடு கிடையாது :
    எவர் வேண்டுமானாலும் சாப்பிடலாம் என்று மனித நேய விதி செய்தார்.
   இரைப்பையை நிரப்பி விட்டுத்தான் இதயத்தோடு பேச வேண்டும் என்பது 
வள்ளல் பெருமானின் சன்மார்க்கச் சட்டம்.
    அதை நிறைவேற்றவேண்டிய  பொறுப்பு நம் எல்லோருக்கும் இருக்கிறது. இதில் மதமோ சாதியோ குறுக்கிடவே முடியாது!
   காரணம்...வள்ளலார் சமயம் கடந்த ஞானி!
  

Comments

Popular posts from this blog

திருவருட் பிரகாச வள்ளலார் மனிதவள மேம்பாட்டு அறக் கட்டளை தொடக்க விழா

மனிதனை ஆட்டுவிக்கிறது மனம்..!

அருட்பாவால் ஆண்டவர்!