*அழுகையே தொழுகையாய் ஆகுமா?* 'நினைந்து நினைந்து உணர்ந்து உணர்ந்து நெகிழ்ந்து நெகிழ்ந்து அன்பே நிறைந்து நிறைந்து ஊற்று எழும் கண்ணீர் அதனால் உடம்பு நனைந்து நனைந்து...நம்முரிமை நாயகனை வனைந்து வனைந்து ஏத்துதும் வம்மின் உலகியலீர்' என்று வாழ்வியல் நெறிகளை வகுத்துக் கூறி நெய்யாய் நெக்குருகி நேயம் வளர்த்தவர் வள்ளலார். அல்லல்பட்டு ஆற்றாது அழுது புலம்பி, அவலத்தில் சிக்கிக்கிடக்கும் ஆன்மாக்களுக்காக-அழுகையைப் புதுவிதமான தொழுகையாக்கிய மெழுகுவர்த்தி ...அவர். நம் தமிழ்க்கவிஞர்களும் நாயன்மார்களும் ஞானிகளும் பெரும்பாலும் அருளமுதம் பெற்று ஆனந்திக்க வேண்டி, அடிவாரம் நனைய அழுதவர்கள்தான்! 'யானே பொய்..என் நெஞ்சும் பொய்.ஆனால் வினையேன் அழுதால் உன்னைப் பெறலாமே' என்பார்.. வான்கலந்த மாணிக்கவாசகர். 'காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி' நிற்பார் ஞானசம்பந்தர். 'மார்பாரப் பொழிகண்ணீர்.. மழைவாரும் இணைவிழிகள்!' என்பது அப்பர் பெருமானின் அருள் பிழியும் தோற்றம்! 'நெஞ்சு பொறுக்குதில்லையே..இந்த நிலைகெட்ட மாந்தரை நினைந்துவிட...
Posts
- Get link
- X
- Other Apps
தைப்பூசச் சொற்பொழிவு வரும் சவரி 2018 தைப்பூச நாள் அன்று வடலூர் மேட்டுக்குப்பத்தில் எரவாஞ்சேரி அன்னம்பாலிப்பு அறக்கட்டளை விழாவில் காலை10 மணிக்குப் பேசுகிறேன். பிற்பகல் மாயவரம் வேத சன்மார்க்க சங்கத்திலும் மாலை திருவண்ணாமலை பாபு சாது சங்கத்திலும் உரையாற்றுகிறேன். முதல்நாள் 30ஆம் தேதி இரவு காரைக்கால் கீழக்காசாக்குடி சங்கத்தில் சொற்பொழிவு செய்கிறேன். அண்மை அன்பர்கள் வருக!
மனிதனை ஆட்டுவிக்கிறது மனம்..!
- Get link
- X
- Other Apps
மனமெனும் ஓர் மடப் பயல்-- பன்முகம் சேர்மனம் என்கிற பரியாசப் பயல்--- விரிந்த மனம் என்னும் சிறிய விளையாட்டுப் பயல்--- பாய்மனம் என்னும் முரட்டுப் பயல்--- மயங்கு புத்தி என்னும் உலக வழக்காளிப் பயல்--- கலையறியாச் சித்தம் என்னும் கனமோசப் பயல்-- அகங்காரம் என்னும் பொல்லா அடவாதிப் பயல்--- இப்படி---- ஏழு வடிவங்களில் மனிதனை ஆட்டுவிக்கிறது மனம் என்று பட்டியல் இடுகிறார் வள்ளல் பெருமான்! மனம் என்னும் மதம் பிடித்த யானையை அடக்கும் அங்குசம்தான் எது..? அறிந்துகொள்ள வாருங்கள்.. வள்ளல் பெருமான் வழியில்..!
சாதித்துக் காட்டிய சரித்திரப் புருஷர்!
- Get link
- X
- Other Apps
நினைந்து நினைந்து உணர்ந்து உணர்ந்து நெகிழ்ந்து நெகிழ்ந்து அன்பே நிறைந்து நிறைந்து ஊற்று எழும் கண்ணீர் அதனால் உடம்பு நனைந்து நனைந்து.... என்று உருகித் திளைப்பார் வள்ளலார். நம் கவிஞர்களும் ஞானிகளும் பெரும்பாலும் அழுதவர்கள்தான்! அழுதால் உன்னைப் பெறலாமே என்பார்.. மாணிக்கவாசகர். மார்பாரப் பொழிகண்ணீர்.. மழைவாரும் இணைவிழிகள்! இது-- அப்பர் பெருமானின் அருள் பிழியும் தோற்றம்! நெஞ்சு பொறுக்குதில்லையே..என்று நாட்டுக்காக அழுதார் கவியரசர் பாரதியார்! இதுபோல் அழுதுள்ளனர்-- இன்னும் பலர்! ஆனால்... வள்ளல் பெருமான் ஒருவர்தான் அழுகையை அர்த்தப் படுத்தினார்!! அழுதுநிற்பதால் பயன்என்ன? அழுவதே தீர்வாகுமா? அழுவது மட்டுமே அருளாகுமா? மண்ணுலகதனில் உயிர்கள்தாம் வருந்தும் வருத்தத்தைக் கண்ணுறப் பார்த்தும் செவியுறக் கேட்டும் கணமும் நான் சகித்திட மாட்டேன்..!...
பறவையைக் கொன்றால் மறுபடி பறக்குமா!
- Get link
- X
- Other Apps
புலால் உண்பது பொறிகளை அழிக்கும்! புன்புலால் யாக்கை வளர்ப்ப தற்காக புலால் உண்பதால் கெடுதியே சிறக்கும்! தாவர உணவே சாத்வீக உணவு! அதுவே இயற்கையாய் அமைந்த உணவு ! ஆருயிர் கொல்லாத அறிவார்ந்த உணவு! ஆமாம்..அதுசரி..!அப்படி என்றால் தழைத்து வளரும் தாவரங்க ளான மரமும் – நெல்லும் – மாடுண்ணும் புல்லும் உணர்ந்து பார்த்தால் உயிர்கள் தானே ! தாவர உயிர்கள் தம்மை அழித்து நா- அரும்பெல்லாம் நத்திடச் சுவைக்கும் அந்தச் செயலும் அகிம்சைக்கு எதிராய் ஆவது தானே ..? அதுகுற்றம் இல்லையா..? ஜீவ காருண்யம் என்று பார்த்தால் தாவ ரங்களை அழிப்பதும் பாவம்! தாவ ரங்களை உண்பதும் பாவம் ! என்பதில் அர்த்தம் எதுவும் இல்லையா! இல்லை என்கிறார் எம்பெரு மானார்! ஓரறி வுடைய உயிர்களுக் குள்ளும் ஜீவ விளக்கம் உண்டென் றாலும் பூக்கள்,காய்கள்,கனிகள் ,கிழங்குகள் தழைகள் கீரைகள் வித்துகள் யாவும் உயிர்கள் தோன்றும் இடங்களே அன்றி அவைகளே உயிராய்க் காண்பது இல்லை! அவற்றில் தனியாய் உயிரும் இல்லை! மண்ணும் நீரும் வித்தும் சேர்ந்தே உயிர்கள் தோன்றும் உலகில்;ஆதலால் அவற்றைப் பறிப்பதும் உண்பதும் அவற்றை ஊறு செய்வதாய் ஒருபோதும் எண்...
ஆயத்தம் செய்வோமா..?
- Get link
- X
- Other Apps
ஒரு மனிதர்.. ஒரு மாமனிதர் .. உடம்போடு உள் நுழைந்து மறைந்த ஓரிடம்... தமிழ்நாட்டில் தான் உள்ளது..! அவ்விடம்.... பெருமான் திருவறைக்குள்.. திருக்காப்பிட்டுக் கொண்டு ஜோதிமயமாய் இறைவனோடு இரண்டறக் கலந்து.. ஞான சித்தி பெற்ற.. சித்தி வளாகம் ஆகும்! சித்தி வளாகத்தைச் சித்தத்தால் தொழுது சிந்தனையை முறைப்படுத்தினால்.. ஆன்ம ஒளி நமக்கு அறிமுகமாகும்..! அறிமுகம் நம்மைப் புதுமுகம் ஆக்கும்! ஆயத்தம் செய்வோமா..?
அவரைப் பின்பற்றுவோம்..!
- Get link
- X
- Other Apps
மும்மொழிப் பாடசாலை...தமிழ் நாட்டில் முதன்முதலில் ஏற்படுத்தியவர் ... முதியோர் கல்வியை முதன்முதலில் ஏற்படுத்தியவர்... முற்போக்குச் சிந்தனையின் மூல புருஷராக விளங்கிய முத்தமிழ் ஞானி.. வள்ளல் பெருமான் என்பதை நினைக்கையில் இதயமெலாம் பூரிப்பும் புத்துணர்வும் எழுகிறது! அதே சமயம் --- அவரைப் பின்பற்றுவதில் எவ்வளவு பின்தங்கி விட்டோம் நாமென்று நினைக்கையில் வேதனை நெஞ்சை விழுங்குகிறது! அவரைப் போன்ற சீர்திருத்தவாதி ஆருமில்லை அவர்தம் நூற்றாண்டில்! அகிலம் கண்விழிக்க அவரைப் பின்பற்றுவோம்..!
ஒரு நல்லாட்சி எப்படி இருக்க வேண்டும்..?
- Get link
- X
- Other Apps
ஒரு நல்லாட்சி எப்படி இருக்க வேண்டும் என்று வள்ளல் பெருமான் ஒரு வரையறை செய்கிறார்.. ஒவ்வொரு ஆட்சியாளரும் இந்த வரைமுறை பற்றி ஒருமுறையேனும் சிந்தித்தால்.. மாபெரும் மாற்றங்கள் மலரும்! மனம் வைப்பார்களா மனிதர்கள் என்பதுதான் மகத்தான கேள்வியாக இருக்கிறது..! பெருமான் பகர்கிறார்: ஒரு நாட்டில்.. பறிபடுவது...பூவாக இருக்கவேண்டும்..! சிறைப் படுவது..புனலாக இருக்கவேண்டும்..! அலைபடுவது.. காற்றாக..இருக்கவேண்டும்..! கடினம் உடையது.. கல்லாக இருக்கவேண்டும்..! வடுப் படுவது..மாவாக (மாமரமாக) இருக்கவேண்டும்..! குலைப் படுவது.. வாழையாக..இருக்கவேண்டும்..! மதுவுண்பது..வண்டாக இருக்கவேண்டும்..! அடிபடுவது பந்தாக..இருக்கவேண்டும்..! கட்டிக் கிடந்து உண்பது..பரியாக (குதிரையாக)..இருக்கவேண்டும்..! குத்துப் படுவது.. நெல்லாக இருக்கவேண்டும்..! போரில் படுவது..நெற்கதிராக இருக்கவேண்டும்..! வலை படுவது..வயலாக இருக்கவேண்டும்..! குறைபடுவது..மாதர் இடைய...
திருவருட் பிரகாச வள்ளலார் மனிதவள மேம்பாட்டு அறக் கட்டளை தொடக்க விழா
- Get link
- X
- Other Apps
திருவருட் பிரகாச வள்ளலார் மனிதவள மேம்பாட்டு அறக் கட்டளை தொடக்க விழாவில் கங்கை மணிமாறன் பட்டிமன்ற நடுவராக... திருவருட் பிரகாச வள்ளலார் மனிதவள மேம்பாட்டு அறக் கட்டளை தொடக்க விழாவில் கங்கை மணிமாறன் பட்டிமன்ற நடுவராக... அறக் கட்டளையின் "சாலைச் சோலை" திட்டத்தின் கீழ் மரக் கன்று நடுகிறார் பூம்புகார் சட்டப் பேரவை உறுப்பினர் திருமிகு. எஸ் .பவுன் ராஜ் அவர்கள் அறக் கட்டளையின் "சாலைச் சோலை" திட்டத்தின் கீழ் உள்ளூர்ப் பள்ளியில் மரக் கன்று நட்டு நீரூற்றுகிறார் கங்கை மணிமாறன்
சகல துன்பங்களுக்கும் சரியான காரணம்...
- Get link
- X
- Other Apps
அன்னதானத்தில் சில காட்சிகள் உலகத் துன்பங்களுக்கு எல்லாம் உண்மையான காரணம் எது என்று உலக ஞானிகள் ஒவ்வொருவரும் உயிரைப் பிசைந்து ஆராய்ச்சி செய்தார்கள்! சகல துன்பங்களுக்கும் சரியான காரணம்... ஆசையே என்று அனைவரும் முடிவு சொன்னார்கள்! ஆசையே துன்பங்களுக்குக் காரணம் அதை விட்டொழியுங்கள் என்று உயிர்வலிக்க உபதேசித்தார்கள்! வள்ளலார் அதை மறுக்கவில்லை! உண்மைதான் என்று ஒப்புக் கொள்கிறார்! ஆனால்..அதே சமயம் அதைவிட அழுத்தமான .. அடிப்படையான காரணம் ஒன்று உண்டு என்று கண்டுபிடிக்கிறார் பெருமான்! சகல துன்பங்களுக்கும் சரியான காரணம்... அதுதான் பசி என்பது! பசிதான் படரும் துன்பங்களுக்கு எல்லாம்.... தொடரும் கொடுமைகளுக்கு எல்லாம் காரணம் என்று பெருமான் அழுத்தமாய் நம்பினார். ஆசையற்றவர்கள் அகிலத்தில் உண்டு! பாரில் எங்கும் பசியற்றவர்கள் உண்டா! அப்பர் பெருமானுக்கு ஆசை இல்லை! ஆனால்.. பசி இருந்தது! ஆண்டவனே கட்டுச் சோறு கொண்டு வந்தான்! சுந்தரருக்கு ஆசை இல்லை! ஆனால் பசி இருந்தது! ஆண்டவனே பிச்சை ஏற்று வந்து ஊட்டினான்! பட்டினத்தாருக்கு ...
அருளாளர் பண்பு!
- Get link
- X
- Other Apps
அடக்கம் அமரருள் உய்க்கும் என்றார் அறிஞருள் அறிஞர் வள்ளுவனார்! கைகளை வீசி நடக்கவும் பயந்து கைகளைக் கட்டியே நடந்த பெருமான் அடக்கத்தின் பேருருவமாகத் திகழ்ந்தவர்! கருங்குழியில் அவர் வதிந்த போது, தண்ணீரால் விளக்கெரிந்த அற்புதம் நிகழ்ந்தது! அடியார்கள் அந்த அருட்திறத்தில் நெகிழ்ந்து பெருமானை வியந்து போற்றத் தொடங்கினர். எம்பெருமானோ..இவ்வாறு பாடினார்! "நெய் விளக்கே போன்று ஒரு தண்ணீர் விளக்கும் எரிந்தது : சந்நிதியின் முன்னே ..!" நெய் விளக்கு என்னால் ..என் அருட் திறத்தால் ..எரியவில்லை! அது அருட்பெருஞ்சோதி ஆண்டவர் அருளால் .. அவர் சந்நிதியின் முன்னே எரிந்தது! ---என்பதை அழுத்தமாய் எடுத்துக் காட்டுகிறார் பெருமான்! என்னே அவர்தம் அடக்கம்! தன்னை வியத்தல் என்பது மனிதப் பண்பு! தன்னை மறத்தல் தானே ..அருளாளர் பண்பு!
நல்லவர்களே ..வாருங்கள்!
- Get link
- X
- Other Apps
கடவுளை அனுபவமாகப் பார்த்தவர் வள்ளலார். அனுபவித்துப் பார்த்தவர் வள்ளலார். அனைத்து உயிர்களிலும் பார்த்தவர் வள்ளளார்! ஊதிப் பழுத்த கனியன்று: நிழல் கனிந்த கனி என்று இயற்கையில் இறைவனைத் தரிசித்தவர் அவர்! இயற்கையை வியக்கும் எவரும் இறைவனைக் காணலாம் என்பதை விளக்க வந்தவர் அவர்! இயற்கை எவரையும் தனியாய்ப் பிரிக்கவில்லை! பிரித்தவன் மனிதன் தான் என்பதை உணர்ந்தவர் அவர்! கலை உரைத்த கற்பனைகள் நிலையெனக் கொண்டாடும் கண்மூடி வழக்கங்களை மண்மூட வேண்டும் என்று கடுமை காட்டியவர் அவர்! அவர்போல் ஒருவர் வழி காட்டினால் போதும்! நம்மைப் போன்றவர்கள் நடந்து காட்டலாம்! நல்லவர்களே ..வாருங்கள்! வல்லவர் வள்ளலாரின் வழியில் வாழ்ந்து காட்டுவோம்!
அருட்பாவால் ஆண்டவர்!
- Get link
- X
- Other Apps
நாம் வள்ளல் என்று ஒருவரைச் சொன்னால் அவரிடம் கையேந்துகிறோம் என்று பொருள்! ஆம்.. வள்ளலாரிடம் நாம் கையேந்துகிறோம்..! எதற்காக..! பொருள் வேண்டும் என்பதற்காக அன்று! அருள் வேண்டும் என்பதற்காக! அதுவும் நாம் மட்டுமே வாழ அன்று! நம்மைச் சார்ந்தவர்களும் - நம்மைச் சார்ந்து வாழும் பிற உயிர்களும் சமத்துவமாய் வாழ! அவரது வழியில் நின்று ஆன்ம நேயம் சூழ! அவரது வழியில் நிற்கவும் அவர் அருள் வேண்டும்! அவரே அருட்பெருஞ்சோதி ஆண்டவரைக் கண்டவர்! எம்மை அருட்பாவால் ஆண்டவர்! ஆகவே அவரிடம் கையேந்துவோம்! அவர் துணையோடு ஆன்ம நேய ஜோதியை ஏந்துவோம் !
சமயம் கடந்த ஞானி!
- Get link
- X
- Other Apps
வள்ளலாருக்கு முன்பும் அருளாளர்கள் இருந்தனர். பக்திப் பனுவல்கள் புனைந்தனர். பாடல்கள் இசைத்தனர். பலதலம் சென்றனர். பயணம் செய்தனர். பரிவாய் நடந்தனர். ஆனாலும் .. வள்ளல் பெருமான் அவர்களிலும் பெரிதும் மாறுபட்டவர். அவர்களில் பெரும்பாலோர் உபதேசித்தனர். பெருமான் செயலில் இறங்கினார். அவர்கள் அடியார்கள் சிலருக்கு உணவு தந்தனர். பெருமான்.. பசித்திருப்பவர்கள் அனைவருக்கும் உணவு படைக்கவேண்டும் என்று துடித்தார். பசிக் கொடுமையை எவரும் விரித்துரைக்க முடியாத அளவுக்கு விரிவுரை செய்து அதைப் போக்குவதே முதல் பணியாகக் கொண்டார்! ஞான சபைக்குள்ளே புறவினத்தார் --அதாவது புலால் உண்பவர் நுழையக் கூடாது என்று விதித்தவர் -- சாலைக்குள்ளே அந்தக் கட்டுப்பாடு கிடையாது : எவர் வேண்டுமானாலும் சாப்பி...
அன்பு காட்டுவோம் வாருங்கள்!
- Get link
- X
- Other Apps
இந்த நூற்றாண்டில்கூட பேச முடியாத புரட்சிச் சிந்தனைகளை அந்த நூற்றாண்டில் அழுத்தம் திருத்தமாக எடுத்துரைத்தவர் வள்ளலார். அனைத்து உயிர்களிடத்திலும் அன்புசெய்தல் என்பது அவர்தம் உயிர்க் கொள்கை. வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன் என்று நெஞ்சார நெகிழ்ந்தார் அவர். பயிரைக் கண்டுதான் வாடினாரா..? களையைக் கண்டு வாடவில்லையா ?அதுவும் உயிர்தானே என்றார்-ஒரு நண்பர். நமக்குத்தான் பயிர்,களை என்ற வேறுபாடெல்லாம் !அவருக்கு எல்லாமே ஒன்றுதான் !அதுவாடினாலும் அவர் வாடுவார்! ''ஓடும் செம்பொனும் ஒக்கவே "நோக்கினார் அல்லவா அப்பர் பெருமான்! உழவாரப் பணி செய்யும் போது உடைந்த ஓடுகளை அப்புறப் படுத்திக் கொண்டிருந்த அவருக்கு முன் ..பொற்காசுகளும் சிதறிக் கிடந்தன.அவற்றையும் குப்பையாகவே கருதி அவர் தூக்கி எறிய வில்லையா!அதுபோலத்தான் வள்ளல் பெருமானுக்கு ..பயிராயினும் களையாயினும் ஒன்றுதான்! "பணத்திலே சிறிதும் ஆசை ஒன்றிலே...
யார் அந்தத் தனஞ்செயன்..?
- Get link
- X
- Other Apps
"செத்தாரைக் கண்டு சிறிதும் அழக் கூடாது! புலம்புதல் -கதறுதல் பொய்வேடம் புனைதல்- அறவே ஆகாது! இறந்தபோது எந்த ஆடையில் இருந்தார்களோ -- அந்த ஆடையை மாற்றக் கூடாது! 3 -ஆம் நாள் 16 -ஆம் நாள் சடங்குகள் தேவை இல்லை!" என்பதை வலியுறுத்துகிறார்-- பெருமான்! இதை மக்கள் மனம் கொள்ளும்படி அறிவியல் ரீதியாக-- உணர்வைக் காயப் படுத்தாமல் எப்படி எடுத்துரைப்பது ? விவாதிக்கலாமே!
- Get link
- X
- Other Apps
"பணத்தைப் புதைத்து வைக்கிறீர்கள்.. பிணத்தைப் புதைக்க மறுக்கிறீர்கள்! பிணத்தை எக்காரணம் கொண்டும் எரியூட்டக் கூடாது! அது கொலைக்குச் சமானம்!" -என்பதை வலியுறுத்தும் வள்ளல் பெருமான், பிணத்தில்.. "தனஞ் செயன் " என்னும் வாயு இருப்பதாகச் சொல்கிறார்! தனஞ் செயன் பற்றி சன்மார்க்கிகள் விவாதிக்கலாமே..! கவிஞர் கங்கை மணிமாறன்
ஐயா ..நான் வேண்டுதல் கேட்டு அருள் புரிதல் வேண்டும்!
- Get link
- X
- Other Apps
ஐயா ..நான் வேண்டுதல் கேட்டு அருள் புரிதல் வேண்டும்! திருவருட் பிரகாச வள்ளலார் என்னும் வெள்ளாடைத் துறவி-- பதினெட்டாம் நூற்றாண்டின் பரப்பளவில் ஆன்மிகத் தடத்தில் அழுத்தமான அடையாளத்தை ஏற்படுத்திய -ஓர் அபூர்வமான மாமனிதர்! ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் என்னும் தெரிவரிய திருமந்திர மொழியை எளியோர்க்கும் தெளிவாக்கிய திருவருட்பா சீலர்! கடவுளை ஒளிவடிவத்தில்கண்ட உயரிய சன்மார்க்கி! மனிதனைப் பிளந்த மத மாச்சரியங்களை சொற்களால் பிளந்த சூத்திரதாரி! கண்மூடி வழக்கங்கள் மண்மூடிப் போவதற்காக காடு மேடுகளைக் கடந்து வடலூரில் வதிந்து வாழ்வியல் போராட்டம் நடத்திய வார்த்தைச் சித்தர்! ஒன்பது வயதிலேயே உறுபொருள் கண்டு உலகச் சார்புகளை உடலாலும் உள்ளத்தாலும் நீத்துக் “கலகம்” செய்யவந்த காருண்ய மூர்த்தி! "கைவீசி நடப்பதும் கூட காற்றில் உலவும் உயிர்களைக் காயப்படுத்திவிடலாம் "என்னும் காரணத்தால்- கைகளைக் கட்டியே நடந்த கருணைத் தென்றல்! "ஜீவகாருண்யமே மோட்ச வீட்டின் திறவுகோல் "என்று சாவியைக் கையிலே வைத்துக் கொண்டு சமுதாயத்தைக் கெஞ்சிய சரித்திர புருஷர் ! சித்துகள் தெரி...
யாருமே அணைக்கவில்லை..!
- Get link
- X
- Other Apps
எரிந்து கொண்டிருக்கிறது.. யாருமே அணைக்கவில்லை..! ---ஏழையின் வயிறு! இப்படி ஒரு புதுக் கவிதை எங்கோ படித்த நினைவு! இந்தத் தீ .. இன்று நேற்று ஏற்பட்டதா.. எத்தனையோ யுகமாய் மனித குலத்தோடு மரிக்காமல் தொடர்கிறது..இன்றுவரை! பசிக்காமல் வாழ்கிற பக்குவத்தைப் படைக்காமல் விட்டானே இறைவன் என்று பல நேரம் துடிக்கிறது--நெஞ்சு! எல்லாருக்கும் எல்லாமான வாழ்க்கை இல்லாமல் போய்விட்டதே என்று எரிகிறது--மனம்! எங்கும் இருக்கிறது இல்லாமை! இல்லாமை இல்லாமல் இல்லை ஒரு வாழ்க்கை! இல்லாதவர் படும்பாடு எழுத்தில் வருணிக்கவும் வார்த்தைகள் இல்லாமல்தான் போகிறது! இறைவன் படைப்பில் ஏனிந்தப் பாகுபாடு என்று ஏராளமாய்க் கேள்விகள் எழத்தான் செய்கின்றன --எப்போதும்! நாத்திகம் பேசி நாத்தழும்பேறிய வாய்களுக்கு முன் நற்றமிழ் பேசிட நரம்பில்லாமல் போகிறது! நலிந்து கிடக்கும் நாட்டின் வரலாறு மாற நாம்தான் ஏதாவது செய்ய வேண்டும்! பசிவயிற்றில் பால்வார்க்க தற்காலிகமாகவேனும் ஏதேனும் செய்யத்தான் வேண்டும் ! என் கிராமத்திலேயே என் விழிகள் காணும் பசிப் புலம்பல்-- இன்னும் மாறாமல்தான் இருக்கிறது சமூகம் என்பதைச் சொல்லாமல் சொ...